பெங்களுரு சிறையில் உள்ள வி.கே.சசிகலா இம்மாத இறுதிக்குள் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரனுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், பெங்களுரு தனி நீதிமன்றம் விதித்த நான்கு ஆண்டு சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
இந்த தீர்ப்பு, 2017 பிப்ரவரியில் வழங்கப்பட்டது. தீர்ப்பு வருவதற்கு முன், ஜெயலலிதா இறந்து விட்டதால், அவருக்கு எதிரான வழக்கு கைவிடப்பட்டது.
சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களுரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களின் நான்கு ஆண்டு தண்டனை காலம், 2021 பிப்ரவரியில் முடிகிறது.
இந்நிலையில், சசிகலா இம்மாத இறுதிக்குள் விடுதலை ஆக வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சிறைதுறையின் கையேட்டின் படி, அனைத்து சிறைவாசிகளுக்கும் ஒரு மாதத்திற்கு 3 நாட்கள் என ஒரு ஆண்டிற்கு 36 நாட்கள் நன்நடத்தை வழங்கப்படுகிறது.
குறிப்பாக இந்த நன்நடத்தை ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டவர்களுக்கு கிடையாது என சிறை கையேட்டில் குறிப்பிடவில்லை.
இதன் அடிப்படையில், சசிகலா சிறையிலிருந்த காலகட்டும் மட்டும் 43 மாதங்கள், ஏற்கனவே 1997 மற்றும் 2014-ம் ஆண்டில் சசிகலா 129 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார்.
இந்த 129 நாட்களை 4 வருட தண்டனையில் கழித்துவிட்டால், அவர் செப்டம்பர் மாதம் விடுதலை ஆக வாய்ப்புள்ளது, இது சிறை கையேட்டை அடிப்படையாக கொண்ட என்னுடைய புரிதல் என வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.