உயிரோடு இருக்கும் மகளுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டி அதிர்ச்சி கொடுத்த தந்தை! தெரியவந்த காரணம்

Report Print Santhan in இந்தியா
2621Shares

தமிழகத்தில் மகள் உயிரோடு இருக்கும் போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஓட்டிய சம்பவத்தின் பின்னணி காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே இருக்கும் வேப்பம்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். இவருக்கு செல்வி என்ற மனைவியும், கீர்த்தனா என்ற மகளும் உள்ளனர்.

இவர் தன் குடும்பத்தினருடன் பெங்களூருவில் வேலை பார்த்து வசித்து வந்த நிலையில், கீர்த்தனாவிற்காக ஜெயபால் குடும்பத்துடன், சொந்த ஊரான தேனிக்கு குடும்பத்துடன் வந்துள்ளார்.

அப்போது கீர்த்தனாவிற்கும் பண்ணைபுரம் பகுதியை சேர்ந்த இளைஞருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, உறவினர்களுக்கு திருமணத்திற்கான பத்திரிக்கைகள் வழங்கப்பட்டன. கடந்த புதன்கிழமை திருமணம் நடைபெறுவதாகவும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் என்று கூறி வீட்டை விட்டு வெளியில் கிளம்பிய கீர்த்தனா பிறகு வீடு திரும்பவில்லை.

வெகு நேரமாகியும், கீர்த்தனா வீடு திரும்பாத காரணத்தால், குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கத்தில் தேடியுள்ளனர். அப்போது கீர்த்தனா வேறொரு இளைஞருடன் சென்று விட்டார் என்ற தகவல் கீர்த்தனாவின் குடும்பத்தினருக்கு தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த கீர்த்தனாவின் குடும்பத்தினர், காவல்நிலையத்திற்கு சென்று புகாரளித்தனர். அதன் பின் கீர்த்தனா மற்றும் அந்த இளைஞரை பொலிசார் அழைத்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டதாக காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

மகளின் முடிவை அறிந்து கொண்ட தந்தை ஜெயபால் கடும் கோபமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளார். திருமணம் நெருங்கிய நேரம் பார்த்து மகள் வேறொரு இளைஞருடன் சென்று திருமணம் செய்ததால், தனது ஊரில் மகள் இறந்து விட்டதாக கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ஜெயபால் அடித்துள்ளார்.

மகள் உயிரோடு இருக்கும்போதே தந்தை கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்