திருநங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞர்! அவர் சொன்ன காரணம்: சம்மதித்த பெற்றோர்

Report Print Santhan in இந்தியா
2335Shares

தமிழகத்தில் திருநங்கையை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் இளைஞர் ஒருவர் திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ள வலையங்குளம் கிராமத்தைச் 24 வயது இளைஞர், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறி, தன்னுடைய பெயரை ஹரினா என்று மாற்றிக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், அதே கிராமத்தைச் சேர்ந்த ஹரினாவின் தாய் மாமாவின் மகனான, கருப்பசாமியும், ஹரினாவும் கடந்த ஓராண்டாகவே ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர்.

இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு, கருப்பசாமி, திருநங்கை ஹரினாவைக் காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பெற்றோர்களிடம் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு முதலில் எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்கள், அதன் பின் இதற்கு சம்மதம் தெரிவிக்க, இரு வீட்டாரின் சம்மதத்துடன், காரியாபட்டியிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் ஹரினாவுக்கும், கருப்பசாமிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணம் குறித்து ஹரினா கூறுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னை ஒரு முழு திருநங்கையாக மாற்றிக் கொண்டோன்.

முதலில் காதலை சொன்னது அவர் தான், இப்போது இருக்கும் காலத்தில் திருநங்கையிடம் பேசுவதையே ஒரு சிலர் அவமரியாதையாக பார்க்கும் நிலையில், இவர் காதலை கூறியவுடன், ஒரு பக்கம் ஆச்சரியமாகவும், இன்னொரு பக்கம் அதிர்ச்சியாகவும் இருந்தது.

காதலித்த சில மாதங்களிலே, அவர் நாம் திருமணம் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். அப்போது இந்த சமூகம் என்ன சொல்லும் என்ற எண்ணம் தான் தோன்றியது.

இது சரியா, தப்பா என்று பல நாட்கள் யோசிக்க வேண்டி இருந்தது. அப்போது எல்லாம் அவர் தான் எனக்கு தைரியம் கொடுத்தார்.

நான் பெற்றோர் சம்மதம் தெரிவித்தால், திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறினேன், அதன் படியே எங்கள் இருவரின் திருமண்ம நடந்துமுடிந்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்,

கருப்பசாமி கூறுகையில், என்னைப் பொறுத்தவரை ஹரினா அமைதி, இரக்கம், உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

இது எல்லாம் அவர் மீது காதலை ஏற்படுத்தியது. நான் அவளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன் என்ற போது, என் வீட்டில் ஒத்து கொள்ளவில்லை, அதன் பின் அவர்களிடம் மெல்ல, மெல்ல சொல்லி புரிய வைத்து, பல நாட்கள் காத்திருந்தேன்.

ஒரு சிலர் என்னை ஏளமானமாக எல்லாம் பேசினார்கள். அதன் பின் ஒருவழியாக பெற்றோர் சம்மதம் தெரிவிக்க, இருவரும் திருமணம் செய்து கொண்டோம்.

அன்பும், அக்கறையும் உள்ள ஒரு திருநங்கையை திருமணம் செய்து கொண்டதை நினைத்து பெருமைப்படுகிறேன். கணவன் மனைவிக்கு எடுத்துக்காட்டா வாழ்ந்து காட்டுவோம் என்று கூறி முடித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்