சசிகலா குறித்த கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் பின் வாங்கிய அதிமுக அமைச்சர்

Report Print Santhan in இந்தியா

சசிகலா விடுதலையாவது குறித்த கேள்விக்கு அதிமுகவை சேர்ந்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதில் சொல்ல பின் வாங்கியுள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் அம்மா பேரவை சார்பில் உறுப்பினர் சேர்கை முகாம் நடைபெற்றது. இதில் வருவாய்த்துறை அமைச்சர் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் , இந்த கூட்டத்திற்கு இவ்வளவு பேர் வந்து உள்ளனர். இங்கு சமுக இடைவெளியோடுதான் உட்கார்ந்து உள்ளோம்.

ஆனால் அடி இடைவெளி கொஞ்சம் இல்லாமல் இருகின்றது. ஆனால் வெளியில் இருந்து உள்ளே வரும் போது டிஜிட்டல் தெர்மா மீட்டரை வைத்து சோதித்து உள்ளே அனுப்பினார். உள்ளே வந்த பிறகு சானிட்டரி எல்லாம் வைத்து உள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சிவகங்கை மாவட்டச் செயலாளர் செந்தில் நாதன் ஒருவர் தான் தொண்டர்களை எப்படி நடத்த வேண்டும்? எப்படி பேச வேண்டும்? என்று அன்போடு வைத்து உள்ளதாக கூறினார்.

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எம்.ஜி.ஆரை உள்நோக்கம் இல்லமால் அரசியல் நோக்கம் இல்லாமல் யார் வேண்டுமானலும் சொந்தம் கொண்டாடலாம் என்று கூறினார்.

அதைத்தொடர்ந்து, சசிகலா வருகையால் அ.தி.மு.கவில் ஏதேனும் மாற்றம் நிகழுமா கேள்விக்கு திடீரென்று அமைச்சர் பின்வாங்கினார்.

அதைப் பற்றி பேச முடியாது என்று தெரிவித்தார். அதுகுறித்து தலைமைக் கழகத்தில் யாரும் சொல்லுவதில்லை. விவாதிக்கவில்லை என்று கூறி சென்றுவிட்டார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்