குளியலறையில் இருந்து அலறியபடி ஓடிவந்த 22 வயது கர்ப்பிணி பெண்! சத்தம் கேட்டு வந்த அக்கபக்கத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் கர்ப்பிணி பெண் தனது குழந்தையுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியின் கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (30) லொறி ஓட்டுனர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). தம்பதிக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகும் இவர்களுக்கு 2வயதில் கமலேஷ் என்ற மகன் உள்ளான்.

தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். இவர்கள் வேல்முருகனின் பெற்றோர் வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பணி காரணமாக வேல்முருகன் கடந்த 15ம் திகதி கிருஷ்ணகிரிக்கு சென்றிருந்தார். அவர் வீட்டில் இல்லாத அந்த நேரத்தில் குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சலில் இருந்த ரஞ்சனா, நேற்று காலை தனது குழந்தையுடன் குளியலறைக்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

பின்னர் அலறியபடி வெளியில் வந்த நிலையில் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் இருவரும் தீயில் கருகுவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்