தங்கையை காதலித்து உல்லாசமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞன்! உடந்தையாக இருந்த நண்பருக்கு நடந்த பயங்கரம்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் தங்கையை காதலித்து, நெருக்கமாக இருந்துவிட்டு கைவிட்ட இளைஞருக்கு, உடந்தையாக இருந்த நண்பனை பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதர் கொலை செய்த சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.

பண்ருட்டி அடுத்த திருவதிகை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். இவர் அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை காதலித்து அவருடன் உல்லாசமாக இருந்துவிட்டு, அதன் பின் அவரை திருமணம் செய்ய மறுள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண், அங்கிருக்கும் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில், பொலிசார் சக்திவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை சக்திவேலின் நண்பர் சாந்தகுமார் திருவதிகை பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்த போது பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரன் ஞானவேல் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 5 பேர் சேர்ந்து என் தங்கையின் வாழ்க்கையை நாசமாக்கிய சக்திவேலுக்கு உடந்தையாக இருந்தது நீதான் என்று கூறி சாந்த குமாரை சரமாரியாக தாக்கியுள்ளனர் .

இதன் காரணமாக படுகாயமடைந்த சாந்தகுமாரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்ததால், உயர் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதையடுத்து சாந்தகுமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்