என்னை கர்ப்பமாக்கினார்... அழகாக இருக்கிறாய்! தற்கொலைக்கு முன் வருங்கால மாமியாரிடம் கதறிய இளம் பெண்ணின் ஆடியோ

Report Print Santhan in இந்தியா

இந்தியாவில் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில், தன்னுடைய காதலன் மற்றும் வருங்கால மாமியாரிடம் கெஞ்சிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ராம்ஸி. 24 வயது மதிக்கதக்க இவர் கடந்த வியாழக்கிழமை இவருடைய காதலன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில், தற்போது இந்த பெண் அவருடைய காதலர் என்று அறியப்படும் பல்லிமுக்குவை சேர்ந்த ஹரிஷ்(24) என்பவரிடமும், அவருடைய வருங்கால மாமியாரிடம் போனில் கண்கலங்கி பேசிய ஆடியோ சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

ராம்ஸி தற்கொலை தொடர்பாக ஹரிஷ் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், இந்த ஆடியோ வெளியாகியுள்ளது.

அதில், ஹரிஷிடம் நான் என்ன தவறு செய்தேன்? நான் ஏன் கஷ்டப்பட வேண்டும்? நீங்கள் என்னை வேண்டாம் என்று வேறு பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறீர்கள்.

இந்த சமயத்தில் நான் எப்படி அமைதியாக இருக்க முடியும். எனக்கு இரண்டு விருப்பங்கள் மட்டுமே உள்ளன. ஒன்று நீங்கள் என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள், இல்லையெல் நான் வாழ விரும்பவில்லை என்று அழுது கொண்டே கூறுகிறார்.

ஆனால் ஹரிஷ், அந்த பெண்ணின் பேச்சிற்கு கொஞ்சம் கூட செவி சாய்க்காமல், அலட்சியமாக சரி என்று பதில் சொல்லிவிட்டு, மறுநாள் 12 மணி வரை சிந்திக்க அவகாசம் கொடுக்கும் படி கேட்கிறார்.

இதையடுத்து, ராம்ஸி, ஹாரிஸின் தாயிடம் போன் உரையாடலில் பேசுகிறார். அப்போது ஹரிஷின் தாய், இது ஒரு நல்ல முடிவு, நீ திருமணம் செய்ய ஒரு நல்ல பையனைத் தேட வேண்டும்.

ஒரு நல்ல குடும்பத்தில் வாழ வேண்டும். நீங்கள் உங்கள் வாழ்க்கையுடன் முன்னேற வேண்டும். உங்கள் மனதை கடினமாக்குங்கள்.

அவரது அப்பா உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார், உங்கள் பெற்றோர் பார்க்கும் நபரை திருமணம் செய்து கொள்ளுங்கள் சிறப்பாக இருக்கும், எங்கள் சூழ்நிலைகளைப் பொறுத்தவரை நான் சொல்லக்கூடியது இதுதான் என்று ராம்ஸியிடம் கூறுகிறார்.

மேலும், நீங்கள் அழகாக இருக்கிறீர்கள், உங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது. உங்களுக்கு ஒரு நல்ல வேலை இருக்கிறது என்று கூறுகிறார்.

ஆனால், ராம்ஸி, நான் வேறொருவருடன் வாழ விரும்பவில்லை. நான் உங்கள் மருமகளாக வாழ விரும்புகிறேன், அவர் தனது அன்போடு என்னிடம் வந்தார். அவர் என்னுடன் இவ்வளவு காலம் இருந்தார், என்னை கர்ப்பமாக்கினார் என்பது உங்களுக்குத் தெரியும்,

பிறகு நீங்கள் என்னிடம் எப்படி இப்படி பேச முடியும்? புதிய உறவில்(பையனுக்கு வேறொரு திருமணம்) நீங்கள் ஆர்வமாக இருந்தால், வளைகாப்பை ஏன் நடத்தினீர்கள்? என்று கேள்வி கேட்க, அதற்கு பதிலளித்த ஹாரிஸின் தாய் ராம்சியிடம் பரவாயில்லை, அவன் வேறொருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, தான் கர்ப்பமாக இருப்பது தெரிந்ததும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹாரிஸை ராம்ஸி கேட்டுக் கொண்டார். தனக்கு கருக்கலைப்பு செய்ய வேண்டும் என்று ஹாரிஸ் வற்புறுத்தினார்,

மேலும் அவர் தனது சொந்த பட்டறையைத் தொடங்கிய பின்னரே ஒரு குடும்பத்தைப் பற்றி சிந்திக்க முடியும் என்று அவர் கூறியதையடுத்து, ராம்ஸி கருவை கலைத்துள்ளார்.

ஹரிஷ் எப்படியும் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று நம்பிக்கையில் வாழ்ந்து வந்தேன். ஆனால், நீங்கள் எனக்குத் தேவைப்படும்போது என்னைப் பயன்படுத்தினீர்கள், இப்போது என்னை வேண்டாம் என்று சொல்கிறீர்கள், எனக்கு ஏதேனும் நேர்ந்தால், என் உடலைக் கூட பார்க்கக்கூட வர வேண்டாம் என்று ராம்ஸி, ஹாரிசிடம் கூறிவிட்டு வைக்கிறார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்