திருநங்கையாக மாறிய மாமன் மகன் மீது காதல்: கெட்டிமேள திருமணம்

Report Print Fathima Fathima in இந்தியா

தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் திருநங்கையாக மாறிய மாமன் மகனை காதலித்து மணமுடித்துள்ளார் இளைஞர் ஒருவர்.

காரியாபட்டி அருகே உள்ள வலையங்குளம் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநங்கையாக மாறியுள்ளார்.

தனது பெயரை ஹரினா என்று மாற்றி கொண்டார். ஹரினாவுடன் அதே கிராமத்தை சேர்ந்த மாமன் மகனான 27 வயது கருப்பசாமி பழகி வந்துள்ளார்.

கருப்பசாமிக்கு பெண் பார்த்து வந்த நிலையில் ஏதோவதொரு காரணம் காட்டி பெண் வீட்டார் தட்டிக் கழித்து வந்துள்ளனர்.

இதனால் விரக்தியில் இருந்த கருப்பசாமி, ஹரினாவை காதலிக்கத் தொடங்கினார், அத்துடன் அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவு செய்தார்.

இதற்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், கடும் போராட்டத்துக்கு பின்னர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

திருநங்கையை மணந்து கொண்ட கருப்பசாமியை அப்பகுதியினர் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்