காட்டுத்தீயாக பரவிய வதந்தி... வீடு புகுந்து நபரை அடித்தே கொன்ற கும்பல்: வெளியான பகீர் வீடியோ

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வீடு புகுந்து கொடூரமாக தாக்கியதில் 45 வயது நபர் பரிதாபமாக மரணமடைந்துள்:ளார்.

உத்தரபிரதேசத்தின் மெயின்புரி பகுதியில் ஞாயிறன்று இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

கொலைவெறி தாக்குதலுக்கு இலக்கான 45 வயதான சர்வேஷ் குமார் என்பவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் வைத்தே மரணமடைந்துள்ளார்.

மாநிலத்தில் கடந்த 48 மணி நேரத்தில் நடக்கும் இரண்டாவது தாக்குதல் சம்பவம் இதுவென கூறப்படுகிறது.

இனிப்பு கடை ஒன்றை நடத்தி வந்துள்ள சர்வேஷ், மெயின்புரி பகுதியில் வாடகை குடியிருப்பில் தமது 11 வயது மகளுடன் குடியிருந்து வந்துள்ளார்.

அப்பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வரும் சர்வேஷின் மகள், வீட்டு வேலைக்கும் சென்று வந்துள்ளார்.

இதனிடையே, சில நாட்களுக்கு முன்னர் சர்வேஷ் தமது மகளை உறவினர்களுடன் அனுப்பி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் ஏழ்மை காரணமாக சர்வேஷ் தமது மகளை விற்றுவிட்டதாக அப்பகுதியில் வதந்தி பரவியது. இந்த நிலையிலேயே 5 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து தாக்கியுள்ளது.

கண்மூடித்தனமான இந்த தாக்குதல் தொடர்பில் வெளியான காணொளி சமூக ஊடகங்களில் தீயாக பரவவே, அரசியல் கட்சி ஒன்று தங்களது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்துள்ளது.

மேலும், குறித்த சம்பவத்தில் வலதுசாரி அமைப்பு ஒன்றுக்கு தொடர்பு இருப்பதாக வெளியான தகவலை பொலிசார் மறுத்துள்ளனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் நால்வரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்