சசிகலா விடுதலையாகி வரட்டும்.. அப்புறம் இதைப் பற்றி பேசுவோம்! அதிமுகவின் முக்கிய புள்ளி கொடுத்த பதில்

Report Print Santhan in இந்தியா

அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின் பார்த்து கொள்ளலாம் என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறியிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளத்.

சொத்து குவிப்பு வழக்கு காரணமாக பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, இந்த மாத இறுதியில் விடுதலையாக அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சசிகலாவின் விடுதலை நிச்சயமாக தமிழக அரசியலில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சசிகலா அதிமுக பக்கம் செல்வாரா? அல்லது அதிமுக இவரிடம் வருமா? என பல கேள்விகள் உள்ளன. இது குறித்து அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய புள்ளிகளிடம் கேள்விகேட்கப்பட்டு வருகிறது.

அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை கூறி வருகின்றனர். இதனால் அதிமுகவிலே ஒற்றுமை இல்லை என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில், கலந்து கொண்ட தமிழக கைத்தறி அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆசிரியர்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

அதன் பின், செய்தியாளர்களை சந்தித்த அவர், புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் இரண்டு குழுக்களை அமைத்துள்ளார்.

அந்த குழுவின் பரிந்துரைகள் படி முடிவு எடுக்கப்படும். விவசாயிகளுக்கான பிரதமரின் கிசான் நிதியுதவி திட்டத்தில் தவறிழைத்தவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேலும், சசிகலா சிறையில் இருந்து விடுதலையானால் அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் சசிகலா முதலில் சிறையில் இருந்து வரட்டும். அப்பறமாக அதிமுகவை யார் கையில் ஒப்படைப்பது என்பதை கூறலாம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்