நான்கு மணி நேரத்திற்குள் எட்டு முறை நிலநடுக்கம்: குலை நடுங்கிய மக்கள்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.

மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நான்கு மணி நேரத்திற்குள் 2.2 முதல் 3.6 ரிக்டர் அளவிலான மொத்தம் எட்டு குறைந்த தீவிர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பால்கர் மாவட்டத்தின் தஹானு மற்றும் தலசாரி தஹ்சில்ஸில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.

இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், 3.0 ரிக்டர் அளவுக்கு மேல் இருந்த மூன்று நிலநடுக்கங்கள், மேலும் 5 நிலநடுக்கங்கள் அதிகாலை 3 மணி முதல் காலை 7 மணி வரை ஏற்பட்டன. அவற்றின் அளவு 2.2 முதல் 2.8 வரை இருந்தது.

இதற்கிடையில், உள்ளூர் அதிகாரிகள் தொடர்புடைய கிராமங்களை ஆய்வு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

கடந்த வாரம் வெள்ளி மற்றும் சனிக்கிழமையின் இடைப்பட்ட இரவின் போது, ​​இதுபோன்ற நான்கு நிலநடுக்கங்கள் உணரப்பட்டன. அவற்றில் ஒன்று 4.0 ரிக்டர் அளவு கொண்டதாக பதிவு செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்