சசிகலா வெளியே வந்தவுடன் அனைவரும் காலில் விழுவார்கள்! இது தான் நடக்கும்: அடித்து கூறும் அமமுகவின் வெற்றிவேல்

Report Print Santhan in இந்தியா

சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்த பின், கட்சியை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும், இல்லையென்றால் அதிமுக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கவிட மாட்டோம் என்று அமமுகவின் வெற்றிவேல் கூறியுள்ளார்.

பெங்களூரு பரப்பன சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விரைவில் விடுதலையாகவுள்ளார். இதனால் இவரின் விடுதலை தமிழக அரசியலில் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தினகரனின் அமமுகவின் உறுப்பினராக உள்ள வெற்றிவேல், ஆர் கே நகர் தேர்தலில் ஜெயித்து டிடிவி தினகரன் ஆளுமை மிக்க தலைமை என்று நிரூபித்தார்.

அதுபோல பொது தேர்தலில் அதிமுக ஜெயிக்க வேண்டும் என்றால் ஆளுமை தேவை. சசிகலாவிற்கு அந்த ஆளுமை இருக்கிறது.

மிகப்பெரிய சதி நடைபெற்ற போது கூவாத்தூரில் போய் அனைவரையும் ஒருங்கிணைத்து ஆட்சியை காப்பாற்றினார்.

இப்போது இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர் செல்வம் இடைத்தேர்தலில் ஜெயித்திருக்கலாம். எம்பி தேர்தலில் ஜெயிக்க முடியாமல் போனது ஏன் என்று கேட்டுள்ள வெற்றிவேல். சசிகலா சிறையை விட்டு வெளியே வந்தால் மிகப்பெரிய தாக்கம் ஏற்படும் என்று கூறியுள்ளார்.

சசிகலா சொல்லித்தான் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆரம்பிக்கப்பட்டது அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதுதான் எங்களின் லட்சியம்.

2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் போது நாங்கள் ஒரே சின்னம் வாங்கி விடுவோம். வரும் தேர்தலில் ஓபிஎஸ் இபிஎஸ் தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்காது.

சசிகலா சிறையை விட்டு வெளியே வந்தால் எல்லோரும் காலில் விழுந்து விடுவார்கள். அப்படி வராவிட்டால் வரும் தேர்தலில் அதிமுகவை தோற்கடிப்போம்.

எங்க கையில் கட்சி வரவேண்டும், இல்லையென்றால் தோற்கடிப்போம். ஒரு தொகுதி கூட ஜெயிக்கமாட்டார்கள், அப்படி தோற்ற பின்னால் அதிமுக எங்கள் வசமாகும் என்று உறுதியோடு வெற்றிவேல் கூறியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வரட்டும், அவர்களைப் பற்றி எங்களுத்தெரியும். எங்க இலக்கு அதிமுகவை காப்பாற்ற வேண்டும் என்பதே மட்டுமே, இல்லாவிட்டால் தமிழ்நாடு மக்கள் அடிமையாகி விடுவார்கள்.

அமைச்சர்கள்,எம்எல்ஏக்களை பற்றி கவலையில்லை. அதிமுக தொண்டர்கள் சசிகலா வரவேண்டும் என்று விரும்புகின்றனர்.

ஜெயலலிதா இருந்த போது ஒரு பாதுகாப்பு உணர்வு இருந்தது. இப்போது அப்படி இல்லை. சசிகலா சிறையை விட்டு வெளியே வந்த போது மீண்டும் அதிமுக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று முடித்துள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்