கிணற்றுக்குள் கிடந்த உடல்... மருத்துவக் கல்லூரி மாணவரின் மரணத்தில் வலுக்கும் சந்தேகம்

Report Print Arbin Arbin in இந்தியா

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் கிணற்றுக்குள் சடலமாக கிடந்த சம்பவம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதான சிவனேஷ். இவரே கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டவர்.

சிவனேஷ், மதுரையில் உள்ள மருத்துவக் கல்லூரி ஒன்றில் நான்காம் ஆண்டு பயின்று வந்துள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக தற்போது சிவனேஷ் தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று காலையில் தூங்கி எழுந்தவுடன் வீட்டுக்குப் பின்புறம் உள்ள தோப்பிற்குச் சென்ற சிவனேஷ், வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

மகனைக் காணாததால், தந்தை சீனிவாசன் வீட்டுக்கு பின்புறம் உள்ள தோப்பில் தேடிப் பார்த்துள்ளார்.

தோப்பிற்குள் எங்கும் மகனைக் காணாததால், சந்தேகத்தின் பேரில் அங்குள்ள விவசாயக் கிணற்றில் எட்டிப்பார்த்துள்ளார்.

தண்ணீர் வற்றிய நிலையில் இருந்த அந்த கிணற்றில் தனது மகன் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

இதனையடுத்து அருகாமையில் உள்ள பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புக்குழுவினரின் உதவியுடன் உடலை மீட்டுள்ளனர்.

தொடர்ந்து அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்