தந்தையை கொன்று குடும்பத்தினர் மற்றும் பொலிசாரிடம் மகன் போட்ட நாடகம்: பிரேத பரிசோதனையில் வெளிச்சத்திற்கு வந்த உண்மை

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் தந்தையை கொன்று நடகமாடிய மகனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

எர்ணாகுளம் பராவூரைச் சேர்ந்த ஜலதரன் என்பவர் வயிற்று வலி மற்றும் வாந்தியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை ஜலதரன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, தனது தந்தை மதுபோதையில் கீழே விழுந்த தலையில் அடிப்பட்டு உயிரிழந்ததாக ஜலதரனின் மூத்த மகன் ராகுல் தேவ் பராவூர் காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார்.

இயற்கைக்கு மாறான மரணம் என பொலிசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், ஜலதரனின் பிரேத பரிசோதனை முடிவு பொலிசாருக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமைந்துள்ளது.

வயிற்றில் கடுமையாக தாக்கப்பட்டு காயம் ஏற்பட்டதே ஜலதரன் உயிரிழந்ததற்கு முக்கிய காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில், ஜலதரன் மற்றும் அவரது மகன் ராகுல் தேவ் மதுபோதையில் மோதிக்கொண்டது தெரியவந்தள்ளது.

இருவரும் போதையில் மோதிக்கொள்வது வழக்கம் என்பதால், தந்தையை ராகுல் கடுமையாக தாக்கியதை குடும்பத்தினர் யாரும் கவனிக்கவில்லையாம்.

ஜவதரன் தாக்கப்பட்டது தெரியாமல் குடும்பத்தினரே அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கை மூலம் தான் ராகுல் தான் ஜலதரனை அடித்து கொன்றது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ராகுலை கைது செய்த பொலிசார் கொலை உட்பட பல பரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். குற்றவாளி ராகுல் தற்போது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்