ஆசை ஆசையாக திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைத்த புதுப்பெண்ணுக்கு இரண்டே மாதத்தில் நேர்ந்த கதி

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான 2 மாதத்தில் புதுப்பெண் கணவனால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த தமிழரசன் (23) பால் வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்ற பிரியதர்ஷினிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது.

இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரியதர்ஷினியின் கணவர் தமிழரசனை பிடித்து விசாரித்த போது அவர் தான் மனைவியை கொலை செய்தார் என தெரியவந்தது.

அதாவது, ஆசை ஆசையாய் திருமண வாழ்க்கையில் பிரியதர்ஷினி அடியெடுத்து வைத்துள்ளார்.

ஆனால் மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை கடுமையாகவும் தாக்கியுள்ளார்.

இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தமிழரசன், வழக்கம்போல தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது,கழுத்தை நெரித்து பிரியதர்ஷினியை, தமிழரசன் கொலை செய்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து தமிழரசனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்