திருமணமான 15 நாளில் கணவன் மரணம்! சட்டைப் பையில் இருந்த கடிதம்: அடுத்த 2 நாளில் மனைவியின் விபரீத முடிவு

Report Print Santhan in இந்தியா
2054Shares

இந்தியாவில் திருமணம் முடிந்து 15 நாட்கள் ஆன நிலையில், கணவர் கார் விபத்தில் உயிரிழந்துவிட்டதால், மனைவி அந்த வேதனையில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் மாலில் இருந்து கீழே குதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு மாலின் மூன்றாவது மாடியில் இருந்து, வெள்ளிக் கிழமை பெண் ஒருவர் திடீரென்று கீழே குதித்தார்.

இதனால் அவர் பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து பொலிசாருக்கு தெரியவந்ததால், பொலிசார் விரைந்து சென்று விசாரித்த போது, அந்த பெண்ணின் பெயர் Saniya Khandelwal என்பது தெரியவந்தது.

அவருக்கு தலையில் பலத்த காயம் மற்றும் உடல் அளவில் சில காயங்கள் இருப்பதால், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த பெண்ணின் கணவர் இரண்டு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அவருக்கு எங்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டதோ, அங்கு தனக்கு இறதிச்சடங்கு நடத்தப்பட வேண்டும் என்று அந்த பெண் தற்கொலை முயற்சிக்கு முன் கடிதம் ஒன்றை வைத்திருந்துள்ளார்.

இது குறித்து அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், கடந்த ஆகஸ்ட் மாதத்தின் கடைசியில் Saniya Khandelwal-க்கும் இந்தூரின் Ujjain பகுதியை சேர்ந்த சிவிக் காண்ட்ராக்டர் Khandelwal என்பவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்நிலையில் கடந்த புதன் கிழமை இரவு Khandelwal ஓட்டிச் சென்ற கார் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தார். அப்போது அவரின் பாக்கெட்டில் இருந்து இரண்டு கடிதங்களை பொலிசார் கண்டுபிடித்தனர்.

அதில், ஒன்று முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கும், மற்றொன்று உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ராவுக்கும் என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும், உஜ்ஜைன் மாநகராட்சியின் இரண்டு அதிகாரிகளை அவர் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி விபத்தில் மோதிய நிலையில் கிடந்த போதும், அவர் 5 பாக்கெட் விஷத்தை விழுங்கியுள்ளார், அதன் பின்னரே இந்த விபத்து நடந்துள்ளது, இதனால் இது தற்கொலையா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

இதையடுத்து பொலிசார் சஞ்சய் குஜ்னர் மற்றும் நரேஷ் ஜெயின் ஆகிய இரு அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கணவரின் மரணத்திற்கு பின் Saniya Khandelwal சொந்த ஊரான Faridabad-க்கு செல்ல தந்தையுடன் விமான நிலையத்திற்கு சென்று கொண்டிருந்த போது, Saniya Khandelwal தந்தையிடம் ஜுஸ் வாங்கிவிட்டு வருவதாக கூறி, அங்கிருந்த C21 மாலுக்கு சென்றுள்ளார்.

அப்போது தான் அங்கிருந்து மாலின் மூன்றாவது மாடிக்கு சென்று கீழே குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அங்கிருந்த மால் ஊழியர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

கணவர் உயிரிழந்துவிட்டதால், அந்த வேதனையிலே இவர் தற்கொலை முடிவு எடுத்துள்ளார். ஆனால் அவரின் கணவர் இப்படி ஒரு முடிவு எடுக்க என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்