வீடு முழுவதும் இரத்தம்! மனைவியை கணவன் கொடூரமாக கொன்றதை உறுதி செய்த பொலிஸ்... திடீரென உயிரோடு வந்த மனைவி

Report Print Raju Raju in இந்தியா
6175Shares

இந்தியாவில் மனைவியை கொலை செய்ததாக கணவனை பொலிசார் கைது செய்த நிலையில் மனைவி திடீரென உயிரோடு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ரன் விஜய் சிங். இவர் மனைவி லதா. தம்பதிக்கு ருத்ரா (7) என்ற மகன் உள்ளான்.

இந்த நிலையில் ருத்ராவை ரன் விஜய் கொடூரமாக கொலை செய்துவிட்டதாக அவரின் தந்தை பொலிசில் புகார் அளித்தார்.

புகாரை தொடர்ந்து ரன் விஜய் வீட்டுக்கு பொலிசார் வந்த போது வீடு முழுவதும் இரத்தம் சிதறி கிடந்தது.

இதையடுத்து ரன் விஜயை பொலிசார் கைது செய்தனர், மேலும் அவர் சடலத்தை எங்காவது மறைத்து வைத்திருக்கலாம் என கருதினார்கள். ஆனால் மனைவியை தான் கொல்லவில்லை என அவர் கூறினார்.

இதற்கேற்றார் போல தம்பதியின் மகன் ருத்ரா பொலிசாரிடம், என் தந்தை தான் என் தாயை குத்தி கொலை செய்தார் என கூறினான், இதனால் லதா கொல்லப்பட்டதை பொலிசார் உறுதி செய்து கொண்டனர்.

இந்த நிலையில் இந்த சம்பவத்தில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட லதா திடீரென உயிருடன் திரும்பி வந்து பொலிசாருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த தலைசுற்ற வைக்கும் சம்பவத்தின் முதற்கட்ட விசாரணையில் கணவன் மற்றும் குடும்பத்தாரை சிக்கவைக்க இப்படியொரு நாடகத்தை லதா நடத்தினார் என தெரியவந்துள்ளது.

அதே நேரத்தில் வீடு முழுவதும் இருந்த இரத்தம் யாருடையது மற்றும் அவரின் இந்த செயலுக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்