ஜனவரி 27ம் திகதி விடுதலை ஆகிறார் சசிகலா?

Report Print Fathima Fathima in இந்தியா

2021ம் ஆண்டு ஜனவரி 27ம் திகதி சசிகலா விடுதலை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் தண்டனை காலம் வருகிற 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது, இதற்கு முன்பாகவே அவர்கள் விடுதலையாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் ஆர்டிஐ மூலம் சிறைத்துறையிடம் தகவல்கள் கேட்கப்பட்டது, இதற்கு பதிலளித்துள்ள சிறைத்துறை நிர்வாகம், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் திகதி சசிகலா விடுதலை ஆகிறார் என தெரிவித்துள்ளது.

அத்துடன் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்றும், ரூ.10 கோடி அபராதத்தை சசிகலா கட்டியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும் அபராத தொகையை கட்டத் தவறினால் சசிகலா விடுதலை ஓராண்டு தள்ளிப்போகும் என தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்