சசிகலா விடுதலையாவதற்கு முன்பு இவர்கள் 2 பேரும் விடுதலையாகலாம்! வெளிவரும் முக்கிய தகவல்

Report Print Santhan in இந்தியா

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விடுதலையாவதற்கு முன்பு, வி.என்.சுதாகரனும் இளவரசியும் விடுதலை ஆகலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா விடுதலை குறித்து நரசிம்ம மூர்த்தி என்பவர் தகவலறியும் உரிமைச் சட்ட மூலம் மனு அளிக்கவே, சசிகலா வரும் ஜனவரி மாதம் 27-ஆம் திகதி விடுதலையாக வாய்ப்பிருப்பதாக சிறைத்துறை நிர்வாகம் பதிலளித்துள்ளது.

இந்நிலையில், சசிகலாவுக்கு முன்னதாகவே வி.என்.சுதாகரன் மற்றும் இளவரசி விடுதலையாக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

ஏனெனில், தண்டனை வழங்கப்படுவதற்கு முன் சுதாகரன் 126 நாட்கள் சிறையில் இருந்துள்ளார். அதன் பின்னரே அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

இந்த நாட்களை கழித்து, அதன் பின் எந்த ஒரு சலுகையும் அவருக்கு வழங்கப்படாவிட்டாலும், நவம்பர் மாத,சுதாகரன் விடுதலையாக வாய்ப்பிருக்கிறது.

சுதாகரனைத் தொடர்ந்து இளவரசியும் விடுதலையாவார். அதன் பிறகு இறுதியாகத்தான் சசிகலா விடுதலை என்று கூறப்படுகிறது.

மேலும், சொத்து குவிப்பு வழக்கு காரணமாக சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்