மகளை கிண்டல் செய்த நபரை தைரியமாக தட்டி கேட்ட தாய்க்கு நேர்ந்த கொடூரம்: சிசிடிவி-யில் பதிவான கலங்க வைக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் மகளை கிண்டல் செய்த நபரை தட்டி கேட்ட தாய் நடுரோட்டில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காஜியாபாத்தின் காவி நகர் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது.

சுனில் சவுதாரி என்ற நபர் அதே பகுதியை சேர்ந்த முகேஷ் தேவி என்பவரின் மகளை தொடர்ந்து கிண்டல் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், சம்பத்தன்று தனது மகளை கிண்டல் செய்து வந்த சுனில் சவுதாரியை முகேஷ் தேவி தட்டி கேட்டுள்ளார்.

இதானல், கோபமடைந்த சுனில் 50 வயதான முகேஷ் தேவியை நடுரோட்டில் இரும்பு நாற்காலியால் கொடூரமாக தாக்கியுள்ளார். அப்பகுதியலிருந்தவர்கள் அனைவரும் சுற்றி நின்று சம்பவத்தை வேடிக்கை பார்த்துள்ளனர்.

இதனையடுத்து, முகேஷ் தேவியின் கணவர் அளித்த புகாரின் அடிப்படையில் காஜியாபாத் பொலிசார் சுனில் சவுதாரியை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்துள்ளனர்.

படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகேஷ் தேவி தற்போது நலமாக இருப்பதாக பொலிசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்