திருமணமான சில மாதத்தில் நேர்ந்த நடக்கக்கூடாத சம்பவம்! கணவனை பார்த்து நிலைகுலைந்து நின்ற புதுப்பெண்

Report Print Raju Raju in இந்தியா
1579Shares

தமிழகத்தில் மனைவி கண்முன்னே புதுமாப்பிள்ளை கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூரை சேர்ந்தவர் குணசேகரன். இவர், இளநீர் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி ரஞ்சிதம். இந்த தம்பதிக்கு 3 மகன்கள் மற்றும் ஒரு மகள். குணசேகரனின் இளநீர் கடை அருகிலேயே அவருடைய 2-வது மகன் கிருஷ்ணமூர்த்தி (27) கரும்பு ஜூஸ் கடை நடத்தி வந்தார்.

கிருஷ்ணமூர்த்திக்கும் ஷஸ்மிதா (23) என்ற பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் குணசேகரனும், அவருடைய மனைவியும் இளநீர் வாங்குவதற்காக நேற்று அதிகாலை பொள்ளாச்சிக்கு சென்று விட்டனர். இதனால் கிருஷ்ணமூர்த்தியும், ஷஸ்மிதாவும் இளநீர் கடை மற்றும் ஜூஸ் கடையில் வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது இளநீர் கடைக்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில், தலை மற்றும் கைகளில் அவருக்கு வெட்டு விழுந்தது. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். தன் கண்முன்னே கணவர் வெட்டப்பட்டு இரத்த வெள்ளத்தில் துடிப்பதை பார்த்த ஷஸ்மிதா நிலைகுலைந்து கதறி அழுதார்.

பின்னர், அருகில் உள்ளவர்கள் துணையுடன் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கணவரை கொண்டு சென்று சேர்த்தார். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்தும் கொலையாளிகள் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்