மீண்டும் பணிக்கு செல்ல பயமாக உள்ளது! மனைவிக்கு நேர்ந்த பயங்கரத்தால் இராணுவ பணிக்கு திரும்ப தயங்கும் கணவன்

Report Print Raju Raju in இந்தியா
1978Shares

தமிழகத்தில் இராணுவ வீரரின் மனைவி மற்றும் தாயார் கொள்ளையர்களால் கொலை செய்யப்பட்ட நிலையில் மீண்டும் பணிக்கு திரும்ப தனக்கு பயமாக உள்ளதாக இராணுவ வீரர் வேதனை தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே முடுக்கூரணி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன். இந்திய-சீன எல்லையான லடாக் பகுதியில் இராணுவ வீரராக பணியாற்றி வருகிறார்.

ஜூலை 14ம் திகதி வீட்டில் இருந்த இவரது தாய் ராஜகுமாரி, மனைவி சினேகா ஆகியோரை மர்மநபர்கள் கொலை செய்து 58 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

குற்றவாளிகளை பிடிக்க காளையார்கோவில் காவல்துறை சார்பில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. சம்பவம் நடந்து 60 நாட்களை கடந்தும் இதுவரையில் குற்றவாளிகள் பிடிபடவில்லை.

இதுகுறித்து ஸ்டீபன் கூறுகையில், 60 நாட்களை கடந்தும் குற்றவாளிகள் பிடிபடாதது காவல்துறை விசாரணையில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும், மீண்டும் எனது குடும்பத்தினரை மட்டுமே குறிவைத்து காவல்துறை விசாரணை மேற்கொள்வது வருத்தமளிக்கிறது. விடுமுறை முடிந்து பணிக்கு திரும்பவே அச்சமாக உள்ளது. உயிருடன் இருக்கும் எனது குடும்ப உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பற்ற நிலையே உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்