திருமணமான 10 மாதத்தில் நடந்த துயரம்! அதே மின் விசிறி, அதே துப்பட்டாவில் தூக்கிட்டு உயிரிழந்த கணவன்

Report Print Santhan in இந்தியா

தமிழகத்தில் மனைவி தற்கொலை செய்து கொண்ட அதே துப்பட்டாவால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறையை சேர்ந்தவர் மணிகண்டன். 35 வயது மதிக்க்கத்தக்க இவர், அதே பகுதியை சேர்ந்த ராதிகா(29) என்பவரை 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இருவரும் பணி நிமித்தம் காரணமாக சென்னை மேற்கு மாம்பலம் ராஜாஜி தெருவில் தனியார் குடியிருப்பில் குடியேறி வாழ்ந்து வந்தனர்.

மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் ரசாயன நிறுவனத்தில் குவாலிட்டி மேனேஜராகவும், இவரது மனைவி ராதிகா கீழ்பாக்கத்திலுள்ள உள்ள தனியார் பைனான்சியல் நிறுவனத்தில் மேலாளராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மணிகண்டனுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே பிரச்சனை அதிகரித்துள்ளது. 15 நாட்களுக்கு முன்னதாக ராதிகா மண்ணெண்ணெய் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன் பெரும்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு சென்று விட்டார். அங்கிருந்து அவரது மனைவிக்கு பலமுறை போன் செய்துள்ளார். அவரது மனைவி போன் எடுக்காததால், பக்கத்து வீட்டுக்காரர்களிடம் விவரத்தைக்கூறி தனது மனைவியை போனை எடுக்க சொல்லும்படி கூறியுள்ளார்.

ஆனால் பக்கத்து வீட்டுக்கார நபர் மணிகண்டன் வீட்டிற்கு சென்று பார்த்த போது, ராதிகா மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இந்த தகவலை அறிந்து வீட்டிற்கு வந்த மணிகண்டன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இதையடுத்து நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாதபோது ராதிகா தற்கொலை செய்து கொண்ட அதே மின்விசிறியில் அதே துப்பட்டாவால் மணிகண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து செய்து கொண்டார்.

இந்த தகவல் குறித்து உடனடியாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டதால், விரைந்த வந்த பொலிசார் இருவரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகியுள்ள நிலையில் இந்த வழக்கானது ஆர்.டி.ஓ விசாரணைக்காக உத்தரவிடப்பட்டுள்ளது.

தம்பதியினர் தற்கொலைக்கு என்ன காரணம் என அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான பத்தே மாதத்தில் புதுமணத் தம்பதியினர் தற்கொலை செய்து கொண்டுள்ள இந்த சம்பவமானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்