நாம் தமிழர் கட்சிக்கு பேரிழப்பு! கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மூத்த நிர்வாகி உயிரிழந்தார்: மீளாத் துயரத்தில் சீமான்

Report Print Basu in இந்தியா

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது உயிரிழந்தார்.

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சகுல் அமீது 19-09-2020 மாலை 06 மணியளவில் மாரடைப்பால் உயிரிழந்தார்.

சாகுல் அமீது அவர்களின் இறுதிச்சடங்கு 20-09-2020 காலை 11 மணியளவில் சென்னை இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சாகுல் அமீது அவர்களின் மறைவையொட்டி ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்படுவதாகவும், மாவட்டம் மற்றும் தொகுதி அலுவலகங்களில் துயரம் கடைபிடிக்கும் விதமாக கட்சிக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட வேண்டுமென்றும் நாம் தமிழர் கட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

என்னை தனியேவிட்டு எங்கே சென்றீர்கள் மாமா? என தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்