மனைவி வீட்டில் பிள்ளைகளை காண சென்ற கணவன்: மாமனாரால் நேர்ந்த துயரம்

Report Print Arbin Arbin in இந்தியா
413Shares

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப தகராறுக்கு இடையே மருமகனை மாமனாரே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் நிக்கோலாஸ் என்பவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

தமது பிள்ளைகளை காண வேண்டும் எனக் கூறி, மாமனாரின் வீட்டுக்கு சென்று தகராறில் ஏற்பட்ட 33 வயதான லிஜின் என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

இரவு சுமார் 9.30 மணியளவில் லிஜின் தமது மனைவியின் தந்தையாலையே கத்தியால் தாக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து ரத்தவெள்லத்தில் சரிந்த லிஜினை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போதும், வழியிலேயே அவர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அதே இரவில் பொலிசார் லிஜினின் மாமனார் நிக்கோலாஸ் என்பவரை கைது செய்துள்ளனர்.

மாமனார் மருமகன் இடையே முன்னரும் பலமுறை வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக லிஜினின் மனைவியும் பிள்ளைகளும் கடந்த சில மாதங்களாக நிக்கோலாஸின் குடியிருப்பில் தங்கி வந்துள்ளனர்.

இந்த நிலையிலேயே லிஜின் தமது பிள்ளைகளை காண வேண்டும் எனக் கூறி இரவு அந்த குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஆனால் வீட்டுக்கு வெளியே வந்த நிக்கோலாஸ் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த நிக்கோலாஸ் தமது மருமகனை மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியுள்ளார்.

மூன்று முறை கத்தியால் தாக்கப்பட்ட நிலையில், லிஜின் சம்பவயிடத்திலேயே சுருண்டு விழுந்துள்ளார்.

இதனிடையே தலைமறைவாகாமல் குடியிருப்பிலேயே இருந்த நிக்கோலாசை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்