உயிரிழந்த நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி! பேரறிவாளன் தாயாரின் உருக்கமான பதிவு

Report Print Raju Raju in இந்தியா
1264Shares

நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி சாகுல் ஹமீது மறைவு தொடர்பாக பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சகுல் ஹமீது மாரடைப்பால் 19-09-2020 மாலை 06 மணியளவில் உயிரிழந்தார்.

சாகுல் ஹமீது அவர்களின் மறைவையொட்டி ஒரு வாரத்திற்கு கட்சி நிகழ்வுகள் யாவும் ரத்து செய்யப்படுவதாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.

இந்த நிலையில் சாகுல் மறைவு குறித்து பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், அந்தோ ! தமிழ் முழக்கம் சாகுல் ஹமீது மறைந்தார்.

மரண தண்டனைக்கு எதிரான போராட்டத்தில் பங்கெடுத்து அறிவின் "An Appeal from death row" நூலை வெளியிட மாநாட்டை நடத்தி, அறிவின் விடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்தவர்.

அவரது திடீர் மறைவினால் வாடும் குடும்பத்தார் துயரில் பங்கேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்