சாகுல் அமீது இறுதிச்சடங்கில் கதறி அழுத சீமான்: நெஞ்சை உருக்கும் காட்சி

Report Print Basu in இந்தியா

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகியும், மாநில ஒருங்கிணைப்பாளருமான சாகுல் அமீது இறுதிச்சடங்கில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சகுல் அமீது மாரடைப்பால் 19-09-2020 மாலை 06 மணியளவில் உயிரிழந்தார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது மறைவிற்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்ணீரஞ்சலியாக இரங்கற்பா எழுதியுள்ளார்.

இன்று சாகுல் அமீது அவர்களின் உடல் சென்னை இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இராயப்பேட்டை பள்ளிவாசல் மயானத்தில் நடைபெற்ற சாகுல் அமீது அவர்களின் இறுதிச்சடங்கில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

இதன் போது சீமான் கதறி அழுத சம்பவம் காண்போரை கலங்க வைத்தது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்