நிலச்சரிவில் அகப்பட்ட மகனின் உடலை 40 நாட்களாக தேடும் தந்தை!

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் கேரள மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி மாயமான 22 வயது மகனை, அவரது தந்தை கடந்த 40 நாட்களாக தேடி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் மூணாறில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 70 பேர் காணாமல் போயுள்ளனர். ஆனால் மீட்புக் குழுவால் இதுவரை 66 பேரின் சடலங்களை மட்டுமே மீட்டெடுக்க முடிந்துள்ளது,

பல நவீன உபகரணங்கள் தேடுதலுக்காக பயன்படுத்தப்பட்ட போதிலும் நான்கு பேரின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில் மூணாறு நிலச்சரிவில் பலியான சண்முகநாதன் என்பவரின் இளைய மகன் நிதீஷ்குமாரின் உடல் மீட்கப்பட்ட போதும், அவரால் தனது மூத்த மகன் தினேஷ்குமாரை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து சண்முகநாதன் தினமும் காலையில் நிலச்சரிவு நடந்த பெட்டிமுடிக்குச் சென்று தனது மகனின் உடலை மாலை வரை தேடுகிறார்.

கடந்த 40 நாட்களுக்கும் மேலாக இதுதான் அவரது அன்றாட வழக்கமாக உள்ளது. ஜனவரி 2021 வரை என் மகனைத் தேடுவேன்.

ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த 41 வது நாளில் வழக்கமாக கடைபிடிக்கப்படும் சடங்குகளை நான் நடத்தவில்லை.

என் மகனைக் கண்டுபிடிக்காமல் நான் எப்படி சடங்கை நடத்த முடியும்? அவரது உடலை மீட்காமல் என்னால் தூங்க முடியாது என்று சண்முகநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்