கத்திமுனையில் தமிழக அமைச்சரின் உதவியாளரை காரில் கடத்திச் சென்ற மர்ம கும்பல்: வெளியான பரபரப்பு சிசிடிவி காட்சி

Report Print Basu in இந்தியா

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளரை மர்ம கும்பல் காரில் கடத்திச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர், உடுமலைப்பேட்டையில் உள்ள அமைச்சரின் அலுவலகத்தில் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த உதவியாளர் கர்ணனை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தி முனையில் கடத்திச் சென்றுள்ளனர்.

அலுவகத்தை நோட்டமிட்டிருந்த கும்பல், கர்ணன் மட்டும் தனியாக இருந்த நேரத்தில் வெள்ளை நிற காரில் வந்து கத்தி முனையில் கடத்தி சென்றுள்ளனர்.

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் கடத்தப்பட்டதாக காவல்நிலையத்தில புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி காட்சிகளை வைத்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்