விஸ்வரூபமெடுக்கும் போதை பொருள் விவகாரம்: பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிகைகளுக்கு சம்மன்

Report Print Basu in இந்தியா

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உட்பட 4 நடிககைள் விசாரணைக்கு ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது.

போதை பொருள் விவகாரம் தொடர்பாக தீபிகா படுகோன், சாரா அலி கான், ஷ்ரதா கபூர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் அகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

4 நடிகைகளும் 3 நாட்களுக்குள் ஆஜராகும் படி போதைப் பொருள் தடுப்புப் பிரிவு உத்தரவிட்டுள்ளது.

தீபிகா படுகோன் வாட்ஸ்அப்-ல் போதை பொருள் குறித்து உரையாடல்கள் இருந்ததை அடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தீபிகா மற்றும் அவரது மேலாளர் கரிஷ்ணா ஆகியோர் வாட்ஸ்அப்-ல் போதை பொருள் குறித்து உரையாடியதாக கூறப்படுகிறது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்