விஜயகாந்தின் தற்போதைய உடல்நிலை குறித்து கட்சி தலைமை கழகம் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Report Print Raju Raju in இந்தியா

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நிலை தொடர்பில் கட்சி தலைமை கழகம் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக விஜயகாந்த் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவரின் உடல் நிலை குறித்து தேமுதிக தலைமை கழகம் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், கழக தலைவர் கேப்டன் பூரண உடல்நலத்துடன் உள்ளார் லேசாக தென்பட்ட கொரோனா அறிகுறி, உடனடியாக சரி செய்யப்பட்டு விட்டது.

6 மாதத்திற்கு ஒருமுறை உடல் பரிசோதனைக்காக, விஜயகாந்த் மருத்துவமனைக்கு செல்வது வழக்கம்

பரிசோதனைக்கு சென்னை மியாட் மருத்துவமனைக்கு சென்ற போது தென்பட்ட அறிகுறி சரிசெய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலானது ரசிகர்கள் மற்றும் தொண்டர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்