எஸ்.பி.பி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்: முதலமைச்சர் பழனிச்சாமி

Report Print Arbin Arbin in இந்தியா

மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த 50 நாட்களாக கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் வெள்ளிக்கிழமை பிற்பகல் மரணமடைந்தார்.

அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்களும், திரை உலக பிரபலங்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இதனிடைட்யே, எஸ்.பி.பியின் உடல் நுங்கம்பாக்கத்தில் இருந்து திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழர்களின் நெஞ்சில் மட்டுமின்றி இந்திய மொழிகள் பலவற்றிலும் பாடிப் புகழ் பெற்று விளங்கி,

மத்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷண் விருதுகள் பெற்ற மாபெரும் இசைக் கலைஞர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் இறுதிப்பயணம் முழு அரசு மரியாதையுடன் நடைபெறத் தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கையில், மறைந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்