2021 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி! வெளிப்படையாக கூறிய சீமான்

Report Print Basu in இந்தியா

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்ற கேள்விக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார்.

சென்னையில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமையகத்தில் ஈழவிடுதலைப் போராட்டத்தின் போக்கையே புரட்டிப்போட்டப் புரட்சியாளன் அண்ணன் திலீபனின் 33 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.

இதில், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட கட்சி உறுப்பினர்கள் திலீபனின் புகைப்படத்திற்கு வீரவணக்கம் செலுத்தினர்.

நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம் எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான், தனித்து போட்டியிடுவோம் என பலமுறை கூறிவிட்டோம்.

இப்போதும் ஒரு முறை கூறிவிடுகிறேன், எந்த காலத்திலும் பாரதிய ஜனதா , காங்கிரஸ், திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளோடு எங்களுக்கு அரசியல் உடன்பாடோ, தேர்தல் உடன்பாடுடோ இல்லை.

இவர்களுக்கு மாற்றாக தான் நாங்கள் புதிய பாதையை உருவாக்கி பயணித்து போகிறோம். நாங்கள் வெல்கிறோமோ வீழ்கிறோமோ அதைப் பற்றி எங்களுக்கு கவலை இல்லை, அது மக்கள் கவலைப்பட வேண்டியது.

ஆனால், வழியே இல்லை என மக்கள் இனி சொல்லக்கூடாது, நாங்களே வழியாக வந்துக்கொண்டிருக்கிறோம், அவர் தான் எங்களை கவனிக்க வேண்டும் எங்கள் அரசியலை பார்க்க வேண்டும். கட்டாயம் தனித்து தான் போட்டியிடுவோம் என சீமான் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்