17 வயதில் திருமணமாகி 2 குழந்தைகளை பெற்ற இளம்பெண்! மறுமணம் செய்ய நினைத்த கணவன்.. அடுத்து நடந்த சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா

தமிழகத்தில் திருமணமான இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

செங்கல்பட்டை பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன். இவருக்கும் கண்ணன் என்பவரது மகள் ஹேமாவதி (26) என்பவருக்கும் திருமணமாகி 9 ஆண்டுகளாகிறது. அதாவது ஹேமாவதிக்கு 17 வயதிலேயே திருமணம் நடந்துள்ளது.

இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். ஜெகநாதனுக்கு மது குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

தினந்தோறும் மது குடித்துவிட்டு வந்து ஹேமாவதியிடம் தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு ஹேமாவதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிசிலும், ஹேமாவதியின் பெற்றோருக்கும் ஜெகநாதன் தகவல் தெரிவித்துள்ளார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் ஹேமாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் ஹேமாவதியின் தந்தை கண்ணன் பொலிசில் புகார் செய்துள்ளார்.

அந்த புகாரில், எனது மகளின் சாவில் மர்மம் உள்ளது. ஜெகநாதனுக்கு வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டு அந்த பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ள ஏற்பாடு செய்து வருவதாகவும் அதற்கு இடையூறாக இருக்கும் தனது மகளை அடித்துக்கொலை செய்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடுகிறார் என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்