இந்தியாவில் மனைவியின் செயலால் அவமானமடைந்த கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஹரியானாவை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். இவரும் ரஜ்னி என்ற பெண்ணும் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் தம்பதிக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
இந்த நிலையில் ரஜ்னி அடிக்கடி யாருடனோ போனில் பேசி வருவதை சஞ்சீவ் பார்த்துள்ளார்.
பின்னர் தனது மனைவிக்கு சத்பிரகாஷ் என்பவருடன் தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ளார்.
இது குறித்து இருவருக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் சத்பிரகாஷை திருமணம் செய்து கொண்டு சேர்ந்து வாழ்வேன் என ரஜ்னி உறுதியாக கூறினார்.
மேலும் இந்த விடயம் அக்கம்பக்கத்தினருக்கும் தெரியவந்தது.
இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்னர் ரஜ்னி வீட்டிலிருந்து மாயமானார், அவர் சத்பிரகாஷுடன் சென்றதை சஞ்சீவ் கண்டுபிடித்தார்.
மனைவியின் செயலால் சமுதாயத்தில் தனக்கு அவமானம் எற்பட்டு விட்டதே என மனமுடைந்த சஞ்சீவ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரின் சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் எடுத்தனர்.
அதில் என் தற்கொலைக்கு காரணம் சத்பிரகாஷ் மற்றும் ரஜ்னி என எழுதப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து இருவரையும் கைது செய்த பொலிசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.