எஸ்பிபி சிகிச்சைக்கு மருத்துவமனை வசூலித்த கட்டணம் தொடர்பாக எழுந்த சர்ச்சை! மருத்துவமனை நிர்வாகம் விளக்கம்

Report Print Raju Raju in இந்தியா
14612Shares

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் மருத்துவ செலவு தொடர்பாக பரவும் தவறான செய்தி மிகவும் வருத்தமளிப்பதாக, மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் தெரிவித்துள்ளார்.

மறைந்த எஸ்பிபி சென்னையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.

இந்த நிலையில் சிகிச்சைக்கு மருத்துவமனை வசூலித்த கட்டணம் தொடர்பில் வாட்ஸ் அப்பில் பல்வேறு வதந்திகள் பரவியது.

அதாவது பெரிய தொகையை செலுத்த முடியாமல் எஸ்பிபி குடும்பத்தார் அவதிப்படுவதாக வதந்தி பரவி சர்ச்சையை கிளப்பியது.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்தின் தீபா வெங்கட் வெளியிட்டுள்ள அறிக்கையில், மறைந்த எஸ்பிபி குடும்பத்தினருக்கு மருத்துவமனை இரண்டு வாரங்களுக்கு முன்பு மேலும் பணம் செலுத்தத் தேவையில்லை என்று தெரிவித்ததாக கூறியுள்ளார்.

இந்த மருத்துவமனை மிகச் சிறந்த சிகிச்சையை அளித்துள்ளதாக கூறியுள்ள அவர், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தங்கள் குடும்பத்திற்கு நெருக்கமானவர் என்றும் தெரிவித்துள்ளார். மருத்துவ செலவு தொடர்பாக பரவும் செய்தி முற்றிலும் தவறானது மற்றும் இதை மேலும் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்