அதிமுக-வில் ஆரம்பித்தது முதல்வர் வேட்பாளர் பிரச்சனை! ஓ.பி.எஸ்-ஈ.பி.எஸ் கடும் வாக்குவாதம்: வெளியான முழு தகவல்

Report Print Raju Raju in இந்தியா
199Shares

அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்று முடிந்தது.

கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்த நிலையில் செயற்குழுவில் நடந்த பல விடயங்கள் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி,ஓபிஎஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

அப்போது என்னை முதல்வர் ஆக்கியது ஜெயலலிதா, உங்களை முதல்வர் ஆக்கியது சசிகலா என ஓபிஸ், எடப்பாடி பழனிசாமியிடம் காட்டமாக பேசியுள்ளார்.

இதோடு தற்போது நடக்கும் ஆட்சிக்கு மட்டுமே துணை முதல்வராக இருக்க சம்மதித்தேன் என கூறியுள்ளார். அதற்கு பதிலடி கொடுத்த பழனிச்சாமி இருவரையும் முதல்வர் ஆக்கியது சசிகலாதான் என கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பேசிய பழனிச்சாமி கொரோனா காலத்திலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறேன்.

முதல்வராக நான் சிறப்பாக செயல்பட்டுள்ளதை பிரதமரே பாராட்டியுள்ளார் என கூறினார் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்