இளம்பெண்ணை தூக்கி சென்று சீரழித்த நால்வர் கும்பல்: முதுகெலும்பை உடைத்து நாக்கை அறுத்த கொடூரம்

Report Print Arbin Arbin in இந்தியா

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களின் அச்சத்தையும் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி, 4 பேர் கொண்ட கும்பலால் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தன்று குறித்த 20 வயது இளம்பெண் விவசாய பகுதியில் வேலை முடித்து, குடியிருப்புக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது அப்பகுதியை சேர்ந்த உயர்சாதியை சேர்ந்த நால்வர் கும்பல், குறித்த பெண்ணை தூக்கி சென்று சீரழித்துள்ளது.

பின்னர் கொடூரமாக தாக்கி முதுகெலும்பை உடைத்துள்ளனர். மட்டுமின்றி தங்களுக்கு எதிராக பேசக்கூடாது என்பதற்காக அவரது நாக்கையும் துண்டித்துள்ளனர்.

பின்னர் உடலை சாலையோரம் விட்டுச் சென்றுள்ளனர். அப்பகுதியை கடந்து சென்ற சில கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில் குற்றுயிராக கிடந்த குறித்த பெண்ணை மீட்டு உள்ளூர் மருத்துவமனையில் சேர்ப்பித்ததுடன், குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகாரும் அளிக்கப்பட்டது.

இதனிடையே, ஆபத்தான நிலையில் அவர் டெல்லியில் உள்ள இரண்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக மாற்றப்பட்டார்.

நால்வர் கும்பல் கொடூரமாக தாக்கியதால் அவரது உடல் எந்த உணர்வும் இன்றி ஸ்தம்பித்த நிலையிலேயே இருந்துள்ளது.

மேலும் உடம்பில் எலும்புகள் நொறுங்கி உள்ளதையும், நாக்கு அறுக்கப்பட்டுள்ளதையும் கண்டு மருத்துவர்கள் அதிர்ந்தனர்.

தீவிர சிகிச்சையில் இருந்து வந்த அவர், தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இதனிடையே, பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த அந்த 4 பேரில் 3 இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்னர்.. இன்னொருவரை தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்