கூட்டு துஷ்பிரயோகம் செய்து இடுப்பு உடைக்கப்பட்டு விஷ ஊசி செலுத்தி இளம்பெண் கொடூர கொலை: உ.பி-யில் தொடரும் துயரம்

Report Print Basu in இந்தியா

உத்தர பிரதேசம் பல்ராம்பூரில் மேலும் ஒரு பட்டியலின பெண் கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டு, இரண்டு கால்களும் இடுப்பும் உடைக்கப்பட்டு, விஷ ஊசி செலுத்தி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஹத்ராஸ் சம்பவம் போலவே கொடுரமாக கொலை செய்யப்பட்ட பல்ராம்பூரைச் சேர்ந்த 22 வயதான இளம்பெண்ணின் உடலும் அவசர அவசரமாக எறிக்கப்பட்டுள்ளது.

பால்ராம்பூரின் கைசாரி கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான கல்லூரி மாணவி செல்வாய்கிழமை கல்லூரி கட்டணம் செலுத்த அருகிலுள்ள நகரத்திற்கு சென்றுள்ளார்.

வீடு திரும்பும் வழியில் பெண் கடத்தப்பட்டதாகவும், குறைந்தது 2 ஆண்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகவும் குடும்பத்தினர் கூறினர்.

அப்பெண் கால்கள் மற்றும் முதுகெலும்புகள் உடைக்கப்பட்டு மயக்க நிலையில் ரிக்‌ஷாவில் வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

பெற்றோர் மகளை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போது அவர் வழியிலே உயிரிழந்துள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதற்கு முன்னர் அந்தப் பெண் விஷ ஊசி போடப்பட்டதாகவும் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிசார் இரண்டு பேரை கைது செய்துள்ளனர்.

செவ்வாயன்று ஹத்ராஸில் கூட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்ட பெண் மருத்துவமனையில் இறந்த சில மணி நேரங்களிலேயே உத்தரபிரதேசத்தின் புலந்த்ஷாஹர் மற்றும் அசாம்கர் ஆகிய இடங்களில் இரண்டு சிறுமிகள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுனர்.

புலந்த்ஷாரில் 14 வயது சிறுமி, அசாம்கரில் 8 வயது சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த ஹத்ராஸ் பெண்ணுக்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மக்கள் குரல் கொடுத்து வரும் நிலையில் உத்தர பிரதேசத்தில் தொடர்ந்து துஷ்பிரயோக சம்பவங்கள் அதிகரித்து வருவது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்