எஸ்பிபி நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு அனுமதி

Report Print Fathima Fathima in இந்தியா

மறைந்த பாடகர் எஸ்.பி.பியின் நினைவிடத்தை பார்வையிட இரண்டு நாட்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டாலும் சிகிச்சை பலனின்றி எஸ்பி பாலசுப்பிரமணியம் கடந்த 25ம் தேதி காலமானார்.

அவரது உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

திரைத்துறையினர் பலரும் அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், பொதுமக்களுக்கு இரண்டு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றும் நாளையும் மாலை 5 மணிவரை பார்வையிடலாம்’ என்று அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்