சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை: ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக தடயவியல் அறிக்கையை மேற்கோள்காட்டி ஏ.டி.ஜி அதிர்ச்சியூட்டும் தகவல்

Report Print Basu in இந்தியா

இந்தியாவையே உலுக்கிய ஹத்ராஸ் கூட்டுப்பாலியல் வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச ஏ.டி.ஜி (சட்டம் மற்றும் ஒழுங்கு) பிரசாந்த் குமார் வெளியிட்ட தகவல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது பாதிக்கப்பட்ட சிறுமி, செப்டம்பர் 22 ஆம் தேதி, மூன்று நபர்களை பெயரிட்டு பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என அலிகார் ரேஞ்ச் இன்ஸ்பெக்டர் ஜெனரல் (ஐ.ஜி) பியூஷ் மோர்டியா கூறியிருந்தார்.

மேலும், மருத்துவ பரிசோதனையில் கற்பழிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மாதிரிகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு அறிக்கைக்காக காத்திருக்கிறோம் எனவும் ஐ.ஜி பியூஷ் மோர்டியா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் ஹத்ராஸ் சிறுமி கழுத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்தார் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என உத்தர பிரதேச ஏ.டி.ஜி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளில் விந்தணுக்களைக் கண்டுபிடிக்கவில்லை என தடயவியல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறுமி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்படவில்லை என்பதை தடயவியல் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.

சாதி அடிப்படையிலான பதற்றத்தைத் தூண்டுவதற்காக சில நபர்கள் இந்த விஷயத்தை திசை திருப்பியதை இது தெளிவுபடுத்துகிறது. அத்தகைய நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் மற்றும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக ஏ.டி.ஜி பிரஷாந்த் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்