தன்னை விட 13 வயது அதிகமான நபரை மணந்து கொண்ட இளம்பெண்! திருமணமான 2 மாதத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம்

Report Print Raju Raju in இந்தியா
898Shares

தமிழகத்தில் திருமணமான 2 மாதங்களில் புதுப்பெண் மர்மமான முறையில் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரத்தில் உள்ள வாகவயல் கிராமத்தைச் சோ்ந்த ரத்தினம் மகன் பாக்கியராஜ் (32). இவருக்கும், முருகேசன் என்பவரின் மகள் கௌசல்யா (19) என்பவருக்கும் இரு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

புதுமணத்தம்பதி தற்போது ஆா்.எஸ்.மங்கலம் அரசாவூரணி பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் கௌசல்யா இரு தினங்களுக்கு முன்னர் அதிகாலை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டதாக கிடைத்த தகவலின்பேரில் பொலிசார் சம்பவ இடத்திற்குச் சென்றனா்.

அங்கு தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த கௌசல்யாவின் உடலில் காயங்கள் இருந்துள்ளன.

அதன்பிறகு சடலத்தைக் கைப்பற்றிய பொலிசார் அதை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதற்கிடையில், தனது மகள் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கௌசல்யாவின் தந்தை, முருகேசன், காவல்நிலையத்தில் புகாரளித்தாா்.

அதன்பேரில் பாக்கியராஜ், ரத்தினம், பாக்கியராஜின் அண்ணன் மனைவி ஜோதி (30) ஆகிய 3 போ் மீது பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்