நாட்டையே உலுக்கி வரும் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம்! காவல் அதிகாரிக்கு குற்றவாளி எழுதியுள்ள கடிதத்தில் இருந்த வார்த்தைகள்

Report Print Santhan in இந்தியா

இந்தியாவையே உலுக்கி வரும் ஹாத்ராஸ் இளம் பெண் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நாங்கள் குற்றத்தை செய்யவில்லை என்று மறுத்து வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ராஸ் பகுதியில் 19 வயதான பட்டியலினத்தை சேர்ந்த இளம்பெண் ஆதிக்க சாதியை சேர்ந்த கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

இளம்பெண்ணின் உடலை இரவோடு இரவாக அவர்களது பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி பொலிசார் எரித்தனர். இந்த சம்பவம் நாட்டு மக்களை உலுக்கியுள்ளது.

குறிப்பாக நாடு முழுவதும் உள்ள பல்வேறு பெண்கள் அமைப்பினர் இந்த சம்ப்வத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் குரல் கொடுத்து வருகின்றனர். கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேசம் ஹக்ரஸிஸ் இளம் பெண் கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு பேரும் தாங்கள் குற்றத்தை செய்யவில்லை என்று மறுத்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை விசாரிக்க,சிறப்பு விசாரணைக் குழுவை அம்மாநில அரசு அமர்த்தியுள்ளது.

மேலும், மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையில், இளம் பெண் உடலில் காயங்கள் இருந்ததாகவும், அது பாலியல் வன்கொடுமையால் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நான்கு பேரும் நாங்கள் குற்றம் செய்யவில்லை என்று மறுத்து வருகின்றனர்.

இது குறித்து குற்றவாளிகளில் ஒருவனான சந்தீப் தாக்கூர் காவல்துறை உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் இளம் பெண் தாயாரும் சகோதரனும் அவரை சித்ரவதை செய்யும் வழக்கம் கொண்டதாக தெரிவித்துள்ளான்.

அந்தப் பெண்ணுடன் தாங்கள் நான்கு பேரும் நட்புடன் பழகிய கோபத்தால் அவரை அவர் குடும்பத்தினரே கௌரவக் கொலை செய்திருப்பதாகவும் பழியை தங்கள் மீது போடுவதாகவும் அந்த கைதி குறிப்பிட்டுள்ளான்.

இதனால் இதில் எது உண்மை? எது பொய் என்பது தெரியவில்லை. பொலிசாரின் முழு விசாரணைக்கு பின்னரே தெரியவரும்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்