சாதிய ஆதிக்கம் என்னையும் விட்டுவைக்கவில்லை! உத்திரப் பிரதேச சம்பவத்தை நினைவுகூரும் பாலிவுட் நடிகர்

Report Print Gokulan Gokulan in இந்தியா

திரைத்துறையில் புகழ் பெற்றிருந்தாலும்கூட எங்கள் கிராமங்களில் ஒன்றர கலந்துள்ள சாதிய ஆதிக்கமானது என்னையும் விட்டு வைக்கவில்லை என பிரபல பாலிவுட் நடிகரும், பேட்டை திரைப்பட வில்லனுமான நவாசுதீன் சித்திக் தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டிருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் சமீபத்தில் தலித் இளம்பெண் ஒருவர் உடலில் பல காயங்களோடு இறந்து கிடந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தனது சொந்த மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் நடப்பது மிகவும் துரதிஷ்டவசமானது என்று சித்திக் கூறியுள்ளார்.

"என் சொந்த குடும்பத்தில், என் பாட்டி ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர். இன்றும் கூட, அவர்கள் என் பாட்டி காரணமாக எங்களை ஏற்றுக் கொள்ளவில்லை" என தனியார் செய்தி ஊடகத்திற்கு அளித்த நேர்காணலில் சித்திக் கூறியுள்ளார்.

மேலும், “கலைஞர் சமூகமுகமாகிய நாங்கள் ஹத்ராஸில் நடந்ததை எதிர்த்துப் பேசுகிறோம். பேசுவது மிகவும் முக்கியம். மக்களில் சிலர் சாதிய பாகுபாடுகள் என ஏதும் இல்லையென டிவிட்டரில் கூறலாம்.

ஆனால், நாடு முழுவதும் அவர்கள் பயணித்தார்களெனில் அவர்களுடைய கருத்தை திருத்திக்கொள்ள வேண்டும் என்கிற யதார்த்தத்தை உணர்ந்துகொள்வார்கள்.” என்றும் சித்திக் கூறியுள்ளார்.

தொடர்ந்து, “ஷேக் சித்திகிஸ் உயர் சாதியினர், நான் பிரபலமானவன் என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு எவ்வித அக்கறையும் கிடையாது. அவர்களுக்கு அவர்களின் பெருமை முக்கியம். அது அவர்களின் நரம்புகளில் ஆழமாக பதிந்துள்ளது. இதை மிக நுட்பமாக புரிந்துகொள்ள வேண்டும்.” என சித்திக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்