38 வயது அதிமுக எம்.எல்.ஏவை மணந்த கோவில் குருக்களின் 19 வயது மகள்! நீதிமன்றத்தில் முக்கிய வாக்குமூலம்

Report Print Raju Raju in இந்தியா

மகளை மீட்டுதரக்கோரி கோவில் குருக்கள் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் நீதிமன்றம் இவ்வழக்கில் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ பிரபுவும், தியாகதுருகம் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி சௌந்தர்யாவும் சமீபத்தில் காதல் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால் தனது மகளை எம்.எல்.ஏ பிரபுவும், அவரது தந்தையும் சேர்ந்து கடத்தி சென்று திருமணம் செய்து விட்டதாகவும், மகளை மீட்டு தரக் கோரியும், சௌந்தர்யாவின் தந்தையான கோவில் குருக்கள் சுவாமிநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில், சம்பந்தப்பட்ட பெண்ணையும், அவரது தந்தையையும் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி ஆட்கொணர்வு வழக்கில் சுவாமிநாதன், செளந்தர்யா நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்கள்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் எம்எல்ஏ பிரபு மனைவி சவுந்தர்யா கணவருடன் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் செளந்தர்யா அளித்த வாக்குமூலத்தில், முழு மனதுடன் பிரபுவை திருமணம் செய்தேன், என்னை யாரும் கட்டாயப்படுத்தவில்லை என கூறியுள்ளார். இதையடுத்தே இந்த உத்தரவை நீதிபதிகள் பிறப்பித்துள்ளனர்.

இதன்மூலம் ஆட்கொணர்வு வழக்கு விசாரணை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்