விஜயகாந்த் வீடு திரும்பினார்! மருத்துவமனை வெளியிட்ட முக்கிய அறிக்கை

Report Print Basu in இந்தியா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தின் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து மீண்டு சமீபத்தில் வீடு திரும்பிய விஜயகாந்த, 6-ஆம் திகதி உடல்நலக்குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஏற்கனவே உடல்நலக்குறைவால் அவ்வப்போது அவதிப்பட்டு வரும் விஜயகாந்திற்கு மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தேமுதிக தொண்டர்கள் கலக்கம் அடைந்தனர்.

இந்நிலையில், இன்று அக்டோபர் 9-ஆம் திகதி விஜகாந்தின் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில், விஜயகாந்த மருத்துவக்குழுவின் தொடர் கண்காணிப்பின் மூலம், அனைத்து கதிரியக்கப் பரிசோதனைகளிலும் அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றமடைந்ததையடுத்து, அவர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

விஜயகாந்த் குணமடைந்து வீடு திரும்பியுள்ளது தேமுதிக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்