தலித் எம்.எல்.ஏ. கோயில் குருக்கள் மகள் திருமணம் செல்லும்! நீதிமன்றம் அதிரடி

Report Print Gokulan Gokulan in இந்தியா

தமிழகத்தில், 38 வயது மதிக்கத்தக்க அதிமுக எம்.எல்.ஏ, 19 வயது கல்லூரி மாணவியை திரும்ணம் செய்த வழக்கில், இந்த திருமணம் செல்லும் என்று நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.

அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினரான தலித் சமூகத்தைச் சேர்ந்த 35 வயதான பிரபு, கோயில் குருக்களின் 19 வயது மகளான சௌந்தர்யாவை கடந்த வாரம் காதல் திருமணம் செய்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் சௌந்தர்யாவின் தந்தை நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில் தன்னுடைய மகள் கடத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் பெண்ணின் விருப்பம் போல அவரது கணவருடன் செல்ல நீதிபதிகள் அனுமதித்து தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், கோயில் குருக்களின் மனுவையும் தள்ளுபடி செய்தனர்.

முன்னதாக நீதிமன்றத்தில் ஆஜரான சௌந்தர்யா, அவரது தந்தையுடன் பேச அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் தனது கணவருடன் செல்வதாக தெரிவித்ததையடுத்து இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.

இந்த திருமணம் குறித்து, சௌந்தர்யாவின் தந்தையும் கோயில் குருக்களுமான சுவாமிநாதன், “எனது மகளை அவளது 15 வயதிலிருந்தே அவர் ஆசை வார்த்தைகளை கூறி தன்வசப்படுத்தியுள்ளார்.” என நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தான் இந்த திருமணத்தினை சாதியின் காரணமாக எதிர்க்கவில்லை. வயது வித்தியாசம் காரணமாகவே எதிர்க்கின்றேன் என கூறியிருந்த சுவாமிநாதன் நீதிமன்றத்தில் இது குறித்து எதுவும் கூறவில்லை.

தீர்ப்புக்கு பின்னர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளித்த சுவாமிநாதன், தான் நம்பிக்கை துரோகத்தால் வீழ்த்தப்பட்டதாகவும், பிரபு தன்னை எப்போதும் அப்பா எனவும், தனது மனைவியை அம்மா எனவும் அழைப்பார். அவருக்கு தங்கை முறை வரும் எனது மகளை அவர் திருமணம் செய்துள்ளார். இது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்