விவகாரத்து செய்து இளைஞனை திருமணம் செய்த கணவன்! அதிர்ச்சியில் மனைவி: வெளியான புகைப்படம்

Report Print Santhan in இந்தியா
1545Shares

இந்தியாவில் வாலிபருடன் ஏற்பட்ட காதல் காரணமாக மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இளைஞரனை கணவன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் குடகு மாவட்டம் விராஜ்பேட்டை தாலுகா பொல்லரிமாடி கிராமத்தை சேர்ந்தவர் சரத் பொன்னப்பா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார்.

மருத்துவரான சரத் பொன்னப்பா அமெரிக்காவில் பணியாற்றி வந்தார். அப்போது அவருக்கு வட இந்தியாவைச் சேர்ந்த வாலிபரான தருண் சந்தீப் தேசாய் என்பவரின் நட்பு கிடைத்துள்ளது.

ஆரம்பத்தில் நண்பர்களாக இருந்த இவர்களின் நட்பு நாளைடைவில் நெருங்கி பழகும் அளவிற்கு மாறிவிட்டது. இதன் காரணமாக, ஒரு கட்டத்தில் இருவரும் ஓரினசேர்கையாளராக மாறினார்கள்.

தன் பின், சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாய்யுடன் நெருக்கமாக இருந்ததால் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதன் காரணமாக அவர் மனைவியை விவகாரத்து செய்ய, இதனால் மனைவி கடும் அதிர்ச்சியில் உறைந்தார்.

இதையடுத்து, கடந்த மாதம் 25-ஆம் திகதி சரத் பொன்னப்பா, தருண் சந்தீப் தேசாயை திருமணம் செய்துகொண்டார்.

மணமக்களுக்கு எப்படி திருமணம் நடைபெறுமோ அதுபோல் இருவரும் புதிய ஆடைகள் அணிந்து திருமணம் செய்துள்ளனர்.

இருவரும் கொடவா சமுதாய மக்களின் பாரம்பரிய உடை அணிந்து, நீண்ட வாள், கத்தி, தலைப்பாகை உள்ளிட்டவை அணிந்து கொடவா சமுதாய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணம் குறித்து குடகு கொடவா சமுதாய நிர்வாகி ஒருவர், இந்த திருமணம் இயற்கைக்கு விரோதமானது. இவ்வாறு திருமணம் செய்துகொள்பவர்கள் நீண்ட நாட்கள் சேர்ந்து வாழ முடியாது.

இதுபோன்ற ஓரினச் சேர்க்கை திருமணங்கள் வெளிநாடுகளில் சகஜம். ஆனால் நமது கலாச்சாரத்திற்கு இது எதிரானது. அவரை நாங்கள் மன்னிக்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.


மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்