சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை கழுத்தை நெரித்து துடி துடிக்க கொன்ற மர்ம நபர்! சிசிடிவி-யில் பதிவான திகிலூட்டும் காட்சி

Report Print Basu in இந்தியா

மகாராஷ்டிரா மாநிலம் இந்தூரில் சாலையில் தூங்கிக்கொண்டிருந்த பெண்னை மர்ம நபர் ஒருவன் கயிற்றால் கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் அப்பகுதியில் இருந்த கடை ஒன்றில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

அதில், பெண் ஒருவர் சாலை ஓரத்தில் தூங்கிக்கொண்டிருந்த போது மர்ம நபர் ஒருவன் முடியை பிடித்து இழுத்துச்சென்று கழுத்தில் கயிற்றால் இறுக்கி துடி துடிக்க கொன்றுள்ளான்.

கொல்லப்பட்ட பெண் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை. கொலைக்காரனையும் பொலிசார் இன்னும் அடையாளம் காணவில்லை, மேலும் எதற்காக மர்ம நபர் அப்பெண்ணை கொன்றான் என்பது மர்மமாகவே உள்ளது.

கொல்லப்பட்ட 45 வயதுடைய பெண் அப்பகுதியில் உள்ள தெருவில் வசித்த படி யாசகம் பெற்று வந்ததாக அப்பகுதிவாசிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

எனினும், யாருக்கும் பெண்ணின் பெயர் தெரியவில்லை. கொலையாளியை கண்டுபிடிக்க பொலிசார் அவனின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.

வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்..

மேலும், முதற்கட்ட விசாரணையில் சமீபத்தில் அப்பகுதியில் வேறொரு பெண்ணுடன் கொல்லப்பட்ட பெண் சண்டையிட்டது தெரியவந்துள்ளது. இதற்கும் இக்கொலைக்கும் தொடர்புள்ளதா என தற்போது வரை தெரியவில்லை.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்