நடிகை குஷ்பு காங்கிரஸை விட்டு வெளியேறி வேறொரு கட்சியில் நாளை இணைகிறார்! உறுதியான தகவல்

Report Print Santhan in இந்தியா

நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு நாளை பாஜகவில் இணையவுள்ளார்.

பிரபல திரைப்பட நடிகையான குஷ்பு காங்கிரஸ் கட்சியில் செய்தி தொடர்பாளராக உள்ளார்.

எப்போது சமூகவலைத்தளங்களில், ஆக்டிவ்வாக இருக்கும் குஷ்புவிற்கும், பாஜகவை சேர்ந்த சிலருக்கும் அடிக்கடி இணையத்தில் வார்த்தை மோதல் ஏற்படும். அந்தளவிற்கு பாஜகவை வசைபாடுவார்.

இந்நிலையில், தற்போது திடீரென்று குஷ்பு பாஜகவில் இணையவுள்ளார். டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் நாளை குஷ்பு இணைகிறார். இதற்காக குஷ்பு டெல்லி புறப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்